இந்தாண்டு இல்லை.. அடுத்த ஆண்டுதான் உள்ளாட்சித் தேர்தல்
திங்கள், 28 நவம்பர் 2016 (16:05 IST)
உள்ளாட்சி மன்ற தேர்தல் டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்த இயலாது என உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
உள்ளாட்சி தேர்தலை டிசம்பருக்குள் நடத்தி முடிக்குமாறு உத்தரவிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? தேர்தல் அறிவிப்பை எப்போது வெளியிடுவீர்கள்? என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு கேள்வி எழுப்பியது.
தமிழக உள்ளாட்சி அமைப்பு களுக்கு கடந்த அக்டோபரில் 2 கட்டமாக தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறி விப்பு வெளியிட்டது. இதில், பழங்குடியினருக்கு உரிய பிரதி நிதித்துவப்படி இடஒதுக்கீடு வழங்கவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அவசர கதியில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பஞ்சாயத்து சட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும் கூறி தேர்தலை ரத்து செய்து கடந்த அக்டோபர் 4-ல் உத்தரவிட்டார். ஏற்கெனவே பொறுப்பில் இருக்கும் நிர்வாகி களின் பதவிக்காலம் அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலரை நியமிக்கவும், முறைப்படி மீண்டும் அறிவிக்கை வெளியிட்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டார்.
இதற்கிடையில், உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வில்லை என்று கூறி பலர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி என்.கிருபாகரன் முன்பு இந்த வழக்குகள் மீதான விசாரணை நடந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்துள்ளது. அதை விசாரித்த அமர்வு நீதிமன்ற நீதிபதிகள், தேர்தலை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்கவில்லை. இந்த சூழ லில் டிசம்பர் 31-ம் தேதிக் குள் தேர்தலை நடத்தி முடிக்கு மாறு மாநில தேர்தல் ஆணை யத்துக்கு ஏற்கெனவே உத்தர விடப்பட்டுள்ளது. ஆனால், உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக மாநில தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை எப்போது வெளியிடுவீர்கள்?
இவ்வாறு நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளிக்க மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞர் அவகாசம் கேட்டதால், வழக்கு விசாரணை இன்றைய தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்திருந்தார்.
அதன்படி இன்று நடந்த விசாரணையின் போது, தேர்தல் மேல்முறையீடு வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்றும், நீதிமன்ற வழிக்காட்டுதல்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வரப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சி மன்ற தேர்தல் டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்த இயலாது என உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது