ஜெ.வுக்கு மாரடைப்பு வர வாய்ப்பே இல்லை: போட்டுடைத்த அப்பல்லோ பிரதாப் ரெட்டி!

செவ்வாய், 20 டிசம்பர் 2016 (13:07 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகிறது.


 
 
செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவர்கள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் ஜான் பீலே மற்றும் சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுனர்கள் என ஒரு குழுவே சிகிச்சை அளித்தது.
 
மருத்துவர்கள் குழுவின் அயராத முயற்சியால் உடல் நலம் பெற்ற ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என கூறப்பட்டது. அனால் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கடந்த 4-ஆம் தேதி செய்திகள் வெளியாகியது. தொடர்ந்து அவர் அபாய கட்டத்தில் இருப்பதாக கூறிய மருத்துவமனை 5-ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா மரணமடைந்தார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து.
 
இதனையடுத்து சமீபத்தில் அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி எழுதிய கட்டுரை ஒன்றில், ஜெயலலிதா மரணமடையும் ஒரு நாள் முன்பு நான் ஹைதராபாத் செல்ல வேண்டி இருந்தது அப்போது ஜெயலலிதாவை சந்தித்து நான் திரும்பி வந்ததும் நீங்கள் எழுந்து நடமாடுவீர்கள் என கூறிவிட்டு சென்றேன்.
 
ஹைதராபாத்தில் இருந்து வந்ததும் ஜெயலலிதாவை டிஸ்சார்ஜ் செய்துவிடலாம் என யோசித்தவாறு சென்றேன். ஆனால் அங்கிருந்து வந்ததும் ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெஸ்ட் என்று கேட்டதும் நான் நொறுங்கிப் போனேன்.
 
காரணம் ஜெயலலிதாவின் இதயத்தில் கார்டியாக் அரெஸ்ட் வருவதற்கான எந்த அறிகுறியும் அது வரை தென்படவில்லை. இத்தனைக்கும் இதய நோய் நிபுணர் ஒருவர் அவரை தீவிரமாக கண்காணித்து வந்தார் என பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்