நித்தியானந்தாவின் சீடர்கள் மீது தாக்குதல்

வெள்ளி, 27 நவம்பர் 2015 (18:47 IST)
வேதாரண்யத்தில் உள்ள சாதுக்கள் மடத்தில் தங்கியிருந்த நித்தியானந்தாவின் சீடர்களை மர்மநபர்கள் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சீடர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.


 
 
நாகை மாவட்டம் வேதாரண்யம் வடக்கு வீதியில் பழமையான சாதுக்கள் மடம் ஒன்று உள்ளது. இந்த மடத்தை சேலம் ஆத்மானந்தா சுவாமி மடத்தின் நிர்வாகி  ஞானேஸ்வரானந்தா பராமரித்து வருகிறார். 
 
கடந்த மாதம் 29ம் தேதி முதல் நித்யானந்தா சீடர்கள் இந்த மடத்தில் தங்கியிருந்து வருகின்றனர். சாதுக்கள் மடந்தை நித்யானந்தா சுவாமி 2 கோடி ரூபாயை கொடுத்து வாங்கியதாக இந்த மடத்தை பராமரித்து வந்த நிர்வாகியிடம் சீடர்கள் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் நேற்றிரவு மடத்திற்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கு தங்கியிருந்த நித்யானந்தா சீடர்கள் 4 பேரை தாக்கியதோடு அங்கிருந்த அவர்களது செல்போன் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களையும் அடித்து உடைத்தாகக் கூறப்படுகிறது.  

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த பார்த்திபன் என்ற சீடர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வேதாரண்யம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்