அவுட்லுக் ட்ராவலர் 2022 விருதுகள்; வெள்ளி விருதை தட்டித் தூக்கிய நீலகிரி!

வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (09:54 IST)
சிறந்த சுற்றுலா தளங்கள் குறித்து வழங்கப்பட்ட அவுட்லுக் ட்ராவலர் விருதுகளில் நீலகிரி வெள்ளி விருது பெற்றுள்ளது.

இந்தியாவில் உள்ள சுற்றுலா தளங்கள் குறித்தும், பயணங்கள் குறித்தும் எழுதி வரும் சுற்றுலா பத்திரிக்கைகளில் முக்கியமானது அவுட்லுக் ட்ராவலர் இதழ். ஆண்டுதோறும் அவுட்லுக் ட்ராவலர் விருது விழா நடத்தில் அதில் பல்வேறு பிரிவுகளில் சுற்றுலா தளங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் சிறந்த மலைவாச ஸ்தலம், சிறந்த வனவிலங்குகள் தலம், சிறந்த சாகச பகுதி, சிறந்த விழாத் தலம் உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. அதில் இந்தியாவின் சிறந்த மலைப்பகுதி சுற்றுலா தளத்தில் நீலகிரி மற்றும் குன்னூர் வெள்ளி விருதை வென்றுள்ளது.

சுற்றுலா பகுதி மற்றும் அங்கு பயணிகளுக்கு கிடைக்கும் பல்வேறு வசதிகளையும், பாதுகாப்பையும் கணக்கிட்டு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்