சென்னை ராயப்பேட்டையில் 'ஹிஸ்புத் தஹீரிர்' அமைப்புக்கு ஆட்கள் சேர்த்ததாக உ.பா சட்டத்தில் 6 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். ஹிஸ்புத் தஹீரிர்' அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் கடந்த ஜூன் மாதம் 30 ம் தேதி 'ஹிஸ்புத் தஹீரிர்' அமைப்பு தொடர்பாக தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 10 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை செய்து வருவதாகவும் குறிப்பாக தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
மேலும் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் ஐந்து நபர்களை தேடப்படும் குற்றவாளியாக என்.ஐ.ஏ சமீபத்தில் அறிவித்த நிலையில் தற்போது தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட 10 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது