மீண்டும் கனமழை பெய்யும்;பின் படிப்படியாக குறையும் : வானிலை மைய இயக்குனர் ரமணன்

செவ்வாய், 24 நவம்பர் 2015 (14:09 IST)
தமிழகத்தில் மீண்டும் கனமழை பொழியும். அதன்பின் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார். 


 
 
ஏற்கனவே பெய்த, பெய்து கொண்டிருக்கும் மழையால் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. இந்நிலையில், சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன்,  இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் “மாலத்தீவு அருகே மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மறைந்து விட்டது.  ஆனால், இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. 
 
அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நிறைய இடங்களில் மழை பெய்யும். அதன்பின், இரண்டு நாட்களில் படிப்படியாக மழை குறையும்” என்று  கூறினார்.
 
மேலும் கூறிய அவர் “அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று வரை சென்னையில் 114 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையின் மழை சராசரி 79 செ.மீ தான். எனவே இது கூடுதல் மழைதான். ஆனால் இது போன்ற மழை 2005ஆம் ஆண்டும் பெய்துள்ளது. நேற்று, சென்னையில் நான்கு மணி நேரம் பெய்த கனமழையில், அதிகபட்சமாக தாம்பரம் பகுதியில் 17.செ.மீ மழை பதிவாகியுள்ளதாக ரமணன் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்