3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தக்கூடாது என மாநில கல்வி கொள்கையில் நீதிபதி முருகேசன் அவர்கள் பரிந்துரை செய்துள்ளார்.
அதில் முக்கியமாக 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளை நடத்த கூடாது என்றும், ஆனால் அதே நேரத்தில் பிளஸ் ஒன் பொதுத்தேர்வு தொடர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கல்லூரியில் சேருவதற்கு பிளஸ் டூ மதிப்பெண் மற்றும் போதாது என்றும், பிளஸ் ஒன் மதிப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தமிழ், ஆங்கிலம் இரு மொழிக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் வழக்கம் போல் நீட் தேர்வை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்றும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் தேசிய கல்விக் கொள்கையில் தெரிவித்துள்ளது போல மாணவர்கள் உயர்கல்வி படிக்கும் போது படிப்பிலிருந்து பாதியில் வெளியேறி விட்டு மீண்டும் அதே வகுப்பில் தொடரும் வழிமுறையை தமிழகத்தில் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.