பாஜக தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். நாளை அவரை நேரில் சந்தித்து நெப்போலியன் பாஜ கட்சியில் சேருகிறார். நெப்போலியனுடன் அவரது ரசிகர் மன்ற மாநில தலைவர் கவுரிசங்கர், செயலாளர் மாந்துறை ஜெயராமன், பொருளாளர் சீதாராமன், துணை தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பாஜகவில் சேருகிறார்கள்.
முன்னதாக, இசை அமைப்பாளர் கங்கை அமரன், நேற்று மாலையில் பாஜக அலுவலகத்துக்கு சென்று தமிழக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோரை சந்தித்து கட்சியில் சேர தனது விருப்பத்தை தெரிவித்தார். அவர் இன்று மாலையில் கட்சித் தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார்.