மாவட்ட ஆட்சித் தலைவர் வாகனம் ஜப்தி

செவ்வாய், 15 மார்ச் 2016 (05:07 IST)
நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் காரை சார்பு நீதிமன்றம் மூலம் ஜப்தி செய்யப்பட்டது. 
 

 
நெல்லையில், கடந்த 1982 ஆம் ஆண்டு இந்திய கடற்படைக்காக நெல்லை ரெட்டியார்புரத்தை சேர்ந்த ஜெயராஜ்குமார், ரவிகுமார், சரஸ்வதி, சாந்தி ஆகியோரின் குடும்பத்திற்கு சொந்தமான 38 ஏக்கர் நிலத்தை அன்றய அரசு கையகப்படுத்தியது.
 
இதற்காக, இவர்களுக்கு சுமார் 40 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. ஏற்கனவே 10 லட்சம் கொடுத்திருந்த நிலையில் 18 லட்சம் ரூபாயை மாவட்ட நிர்வாகம் வழங்கவில்லை.
 
இந்நிலையில், அந்த நிலத்தின் உரிமையாளர்கள் 1985 ஆம் ஆண்டு மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில், நிலுவைத் தொகையை வழங்குமாறு சார்பு நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டது. ஆனால், இதை மாவட்டநிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.
 
இதனையடுத்து, நிலுவைத்தொகை வழங்காத மாவட்ட ஆட்சித் தலைவரின் காரப் ஜப்தி செய்ய மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், ஆட்சித் தலைவரின் காரை  நீதிமன்ற ஊழியர்கள் மூலம் ஜப்தி செய்யப்பட்டது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்