பழ.நெடுமாறன் துவக்கிய தமிழர் எழுச்சிப் பயணம்

செவ்வாய், 6 அக்டோபர் 2015 (01:53 IST)
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் தமிழர் எழுச்சிப் பயணத்தை செப்டம்பர் 5 ஆம் தேதி துவக்கினார்.
 

 
வள்ளலார் பெருமான் பிறந்த நாளான அக்டோபர் 5 ஆம் தேதி அன்று மதுவிலக்குப் போராளி சசிபெருமாள் மரணம் அடைந்த உண்ணாமலைக்கடை எனுமிடத்திலிருந்து சென்னையை நோக்கி தமிழர் எழுச்சிப் பயணத்தை தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் துவங்கினார். 

மது ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, இயற்கை வளம் காத்தல், தமிழர் உரிமை நிலைநாட்டல், அரசியலில் நேர்மை, நிர்வாகத்தில் நேர்மை, சந்தர்ப்பவாத அரசியலுககு சாவுமணி போன்ற கோரிக்கைக்களை முன்வைத்து இந்த எழுச்சிப் பயணம் துவக்குகிறார்.
 
இந்த நிலையில், எழுச்சிப் பயணத்தின் போது, சீரழியும் தமிழகம் எனும் அவரது புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தில், தமிழகத்தின் அவல நிலையை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளதாகவும், நம்மைப் பீடித்திருக்கும் சமுக நோய்களை நூலில் அட்டவணையிட்டு, அவற்றை நீக்க எழுச்சிப் பயணமும் செல்லும் அவரது முயற்சி வெற்றி பெற ஈழத்தமிழ் அமைப்புகள் பலவும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளன. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்