சென்னைக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை

புதன், 18 மே 2016 (01:07 IST)
கனமழை பாதிப்பை தடுக்கும் வகையில், தேசிய பேரிடர் மீட்பு குழு சென்னைக்கு வருகை தந்துள்ளனர்.
 

 
சென்னையில் கனமழை பாதிப்பை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களுக்கு வெள்ள அபாய தடுப்பு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், பொது மக்கள் மழை வெள்ளத்தால் பாதிப்பு அடையக் கூடாது என்பதற்காக, மழை வெள்ள பாதிப்பு குறித்தும், உதவி தேவைப்படுவோர்களுக்கு இலவச எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1070 என்ற இலவசத் எண்ணைத் தொடர்பு கொண்டு பொது மக்கள் தகவல் உதவி கோரலாம். சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் குறித்து 1913 எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், மழை வெள்ளத்தை சமாளிக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  அரக்கோணத்தில் இருந்து 6 பேரிடர் மீட்பு குழுவினர் சென்னை வருகை தந்துள்ளனர். 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

வெப்துனியாவைப் படிக்கவும்