தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக வட்டாரத்தில் சில குழப்பங்கள் மட்டும் இன்னும் நீடித்துக்கொண்டே இருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படாலும் அது அனைவராலும் விரும்பட்ட நிகழ்வாக அமையவில்லை என்பதே உண்மை. காரணம் சசிகலா தலைமையை ஏற்காமல் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுக்கு பகிரங்கமாகவே ஆதரவு கொடுத்து வருகின்றனர்.இதனால் அவருக்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது.
இதனிடையே சசிகலா கணவர் நடராஜனும் முதல்வர் கனவில் மும்முரமாக உள்ளாராம். தன்னை முதல்வராக்கு; அனைத்தை பிரச்ச்சனைகளையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றும், சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு முன் நீ முதல்வரானால் அது நல்லதல்ல என்று சசிகலாவிடம் கூறினாராம். இதனால் கடும் மன உளச்சலில் சிக்கி தவிக்கிறாராம் சசிகலா. நடராஜனை முதல்வராக தேர்வு செய்வது குறித்து பேசினால் அதிமுகவில் ஏற்படும் பிர்சனைகளையும் நன்றாக அறிந்துள்ளார் சசிகலா. அதனால் நடராஜன் கனவை ஒருபோதும் சசிகலா ஏற்கமாட்டார் என்றே கட்சி வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர்.