எங்களை திருநங்கைகளாக அறிவித்துவிடுங்கள்: நாராயணசாமி ஆதங்கத்தின் காரணம் என்ன?

வெள்ளி, 22 நவம்பர் 2019 (12:43 IST)
எங்களை திருநங்கையாக அறிவித்து விடுங்கள் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. 
 
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சமீபத்தில் தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்து அதில் உரையாற்றினார். அப்போது அவர் புதுச்சேரி புறக்கணிக்கபடுவதை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தினர் அவர் பேசியதாவது, 
 
புதுச்சேரி மாநிலத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. சமீபத்தில் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மத்திய அரசின் 15வது நிதிக் குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளது. 
 
ஆனால் ஏற்கனவே யூனியன் பிரதேசங்களாக இருந்து வரும் புதுச்சேரி அதில் சேர்க்கப்படவில்லை. அதேபோல மாநில அரசுகளுக்கான நிதிக்குழு யூனியன் பிரதேசங்களுக்கான நிதிக்குழுவிலும் புதுச்சேரியை சேர்க்கவில்லை. 
 
ஆரம்பத்தில் 70% மத்திய அரசு நிதி கிடைத்தது. தற்போது 30% நிதி வழங்குவதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் 26% மட்டுமே கிடைக்கிறது. மாநில அரசுகளுக்கான நிதிக்குழு யூனியன் பிரதேசங்களுக்கான நிதிக்குழு என எதிலும் புதுச்சேரியை சேர்க்கவில்லை எனவே எங்களை திருநங்கையாக மத்திய அரசு அறிவித்துவிடலாம் என பேசியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்