பேரறிவாளன் உள்பட 3 பேர் விடுதலைக்கு மதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் - வைகோ

சனி, 12 ஜூலை 2014 (15:47 IST)
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் விடுதலைக்கு மதிமுக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருக்கும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருப்பத்தூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

அப்போது பட்ஜெட் குறித்தும் 3 பேரின் விடுதலை குறித்தும் அவர் செய்தியாளர்களிடடம் கூறியதாவது:–

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் விவசாயிகள் ஏழை மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் உள்ளது. நதிநீர் இணைப்புக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதை வரவேற்கிறேன். இது நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும் பட்ஜெட்" என்று கூறினார்.

மேலும்,

"முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் கடந்த 23 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களின் விடுதலைக்காக மதிமுக போராடி வருகிறது. அவர்கள் விடுதலைக்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருப்போம்." என்று வைகோ கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்