சிறையில் முருகன் தொடர்ந்து மௌன விரதம் : நளினியையும் சந்திக்க மறுப்பு

சனி, 7 மே 2016 (16:39 IST)
ராஜீவ்காந்தி கொலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முருகன் யாருடனும் பேசாமல் தொடர்ந்து மௌன விரதம் இருந்து வருவது சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.


 

 
முருகன் மட்டுமில்லாது அவரின் மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பொதுவாக நீதிமன்ற உத்தரவுபடி 15 நாட்களுக்கு ஒருமுறை முருகன், தனது மனைவி நளினியை சந்தித்து பேசுவது வழக்கம்.
 
ஆனால், கடந்த சில நாட்களாக முருகன் மௌன விரதம் இருந்து வருகிறார். சிறையில் அதிகாரிகளுடனோ அல்லது சக கைதிகளுடனோ அவர் பேசுவதில்லை. அவர் விடுதலை வேண்டி மௌன விரதம் இருக்கிறாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தெரியவில்லை.
 
இதனால், தனது மனைவி நளினியை சந்திப்பதைக் கூட அவர் தவிர்த்து விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்