முகிலனுடன் பேசியது என்ன? மனைவி பூங்கொடி பேட்டி

ஞாயிறு, 7 ஜூலை 2019 (20:06 IST)
கடந்த பிப்ரவரி மாதம் திடீரென காணாமல் போன முகிலன் நேற்று திருப்பதி ரயில் நிலையத்தில் ஆந்திர மாநில போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடந்த நிலையில் இன்று மாலை அவர் பாலியல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார்.
 
இந்த நிலையில் முகிலனின் மனைவி பூங்கொடி தனது கணவரை பார்க்க சென்னை வந்துகொண்டிருந்தபோது அவர் வந்த கார் விபத்துக்குள்ளானது. இதில் லேசான காயம் அடைந்த பூங்கொடி அதன்பின்னர் வேறொரு காரில் சென்னை வந்தார். கணவர் முகிலனை பார்த்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
 
எனது கணவர் முகிலன் தெளிவான மனநிலையில் இல்லை. எனது கணவரின் உடல்நிலை மோசமாக உள்ளது.  தான் கடத்தப்பட்டதாகவும், அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும் கூறினார். மேலும் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் அவரை சித்திரவதை செய்திருக்கிறார்கள். முகிலனுக்கு எதிரான பாலியல் வழக்கு சித்தரிக்கப்பட்டது. முகிலன் என்னிடம் எதுவும் பேசவில்லை. அவர் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். 
 
மேலும் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கும் அளவுக்கு எனது கணவரின் உடல்நிலை மோசமாக உள்ளது. தன்னை எங்கே அடைத்து வைத்திருந்தனர் என்பது எனது கணவர் முகிலனுக்கு தெரியவில்லை' என பூங்கோடி பேட்டியில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்