இதுகுறித்து விழுப்புரம் எம்.பி,ரவிக்குமார் கூறியுள்ளதாவது :
விழுப்புரம் மாவட்டம் பொய்கை அரசூர் கிராமத்தில் நேற்று குழந்தைகள் தெருவில் விற்பனை செய்யப்பட்ட பேக்கரி பண்டங்களை வாங்கிச் சாப்பிட்டதால் 17 சிறுவர்கள் வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் , இன்று அதிகாலை அரசு கல்லூரி மருத்துவமனையில் அவசரப் பிரிவில் சேர்த்துள்ளனர். அவர்களின் உடல் நலம் குறித்து கல்லூரி முதல்வரிடம் விசாரித்தேன். குழந்தைகளில் இருவருக்கு மட்டும் வாந்தி இருப்பதாகவும் அவர்களுக்கு களுக்கு டிரிப் போட்டிருப்பதாகவும் மற்ற குழந்தைகள் நலமுடன் இருப்பதக கூறியுள்ளார். காலாவதியான பண்டங்களை கிராமங்களுக்கு எடுத்துச் சென்று விற்பது குற்றமாகும். அதனால் பெற்றோரும் விழிப்புடன் இருந்து இதுபோன்ற பண்டங்களை வாங்கித் தராமல் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.