சிதம்பரம் அருகே அத்தியாநல்லூர் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் வாந்தி மயக்கம் ஆகிய பிரச்சனைகளால் அவதிப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் இன்று சாப்பிட்ட முட்டை அழுகிய நிலையில் இருந்ததால் புட்பாய்சன் ஆகி இருக்கலாமா என்ற கோணத்தில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.