இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மார்சிஸ்ட் பிருந்தா காரத், "கூலித் தொழிலாளர்கள், பாமர மக்கள் உள்பட 86 சதவீத மக்கள் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பு பண நடவடிக்கை மோடியின் தோல்வியை காட்டுகிறது. இது மிகப்பெரிய நகைச்சுவையாக இருக்கிறது.
மக்களின் சேமிப்பை மீண்டும் வங்கிக்கே கொண்டு வந்து, தவறிழைத்த அதே கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடனாக அளிப்பதே. உச்சநீதிமன்றத்தின் கேள்விகளுக்கு மத்திய அரசு திணறி வருகிறது. நாடாளுமன்றத்தில் வங்கி வாசலில் இறந்த மக்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் மரணத்தை குறித்த ஒரு நிமிட மவுன அஞ்சலி கூட மோடி செலுத்தாதது கண்டிக்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.