கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர்கள் பலி; முதல்வர் இரங்கல், நிதியுதவி!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (15:54 IST)
கடலூரில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அவர்களது குடும்பத்திற்கு இழப்பீடும் அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் எஸ்.புதூர் வண்டிக்குப்பம் அருகே உள்ள பாழடைந்த அகதிகள் முகாம் கட்டிடத்தின் அருகே மாணவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் வீரசேகர், சதீஷ் என்ற இருவர் உயிரிழந்த நிலையில் புவனேஷ்வரனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தாருக்கு வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், காயமடைந்த சிறுவனுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்திரவிட்டுள்ளேன். சிகிச்சைப் பெற்றுவரும் சிறுவன் புவனேஷின் குடும்பத்தாருக்கு ரூ.50,000 முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும். உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்