குஜராத் தொங்கு பால விபத்து; 140 பேர் பலி! – மு.க.ஸ்டாலின் இரங்கல்!

திங்கள், 31 அக்டோபர் 2022 (09:23 IST)
குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 140 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் பிரம்மாண்டமான தொங்கு பாலம் ஒன்று மச்சு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் இந்த பாலம் புணரமைக்கப்பட்டு மறுதிறப்பு செய்யப்பட்டிருந்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான மக்கள் பாலத்தில் நின்றுள்ளனர்.

அப்போது மக்களின் எடைய தாள முடியாமல் தொங்கு பாலம் அறுந்து விழுந்தது. இதில் மக்கள் பலர் ஆற்றில் விழுந்தனர். பாலர் பாலத்தின் மீதங்களை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி இந்த பால விபத்தில் பலி எண்ணிக்கை 140ஐ கடந்துள்ளது. 117 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.




இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “குஜராத் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் பல அப்பாவி உயிர்கள் பலியான சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய விரும்புகிறேன். அதேசமயம் விபத்தில் சிக்கி மாயமானவர்கள் விரைந்து மீட்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Edited By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்