சென்னை மெரினா பீச்சில் பஜ்ஜி கடை வைத்திருக்கும் அஜித்குமார் என்பவருடைய திருமணத்துக்கு சென்று வாழ்த்து கூறியுள்ளார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது இரவு நேரங்களில் சென்னை மெரினா பீச்சுக்கு சென்று ரிலாக்ஸ் செய்துகொள்வது வழக்கம். மெரினா பீச்சுக்கு செல்லும் ஸ்டாலின் அங்கு கடை வைத்திருப்பவர்களை சந்தித்து அவர்களுடன் பேசுவார்.
இப்படி சில நாட்களுக்கு முன்னர் மெரினா பீச்சில் பஜ்ஜி கடை வைத்திருக்கும் அஜித்குமாரை சந்தித்து பேசியுள்ளார் ஸ்டாலின். அப்போது அஜித்குமார் தனக்கு வரும் 25-ஆம் தேதி சாந்தோமில் வைத்து திருமணம் நடைபெற உள்ளதாகவும், அதற்கு நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் எனவும் ஸ்டாலினிடம் கூறியுள்ளார்.
அப்போது வருவதாக உறுதியளித்த ஸ்டாலின் திருமணத்துக்கு வருவாரா மாட்டாரா என்ற குழப்பத்துடனே அஜித்குமார் இருந்துள்ளார். இந்நிலையில் சரியாக திருமணத்துக்கு வருகை தந்து ஸ்டாலின் திருமண வீட்டாரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். மணமக்களை வாழ்த்திய ஸ்டாலின் பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.