பள்ளி மாணவர்கள் தங்கள் கைகளில் சாதி அடையாளத்தை குறிப்பிடும் வகையில் வண்ண கயிறுகள் கட்டுவது குறித்து அரசின் சுற்றறிக்கை ஒன்று வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த கயிறு விவகாரத்தில் எச்.ராஜா உள்ளிட்ட சில தலைவர்களும் எதிர்ப்பும், கனிமொழி உள்ளிட்ட சில தலைவர்கள் ஆதரவும் தெரிவித்து வருகின்ரனர். இந்த நிலையில் இந்த கயிறு விவகாரம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள சாரண, சாரணியர் இயக்க தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்த போது பள்ளி மாணவர்கள் கையில் கட்டும் கயிறு விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், 'பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ண கயிறுகள் கட்டுவது தொடர்பான அரசின் சுற்றறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டது' என்று கூறினார்.