போகாத ஊருக்கு வழி காட்டும் அமைச்சர் முத்துசாமி - ராமதாஸ் காட்டம்..!!

Senthil Velan

வியாழன், 26 செப்டம்பர் 2024 (14:08 IST)
தேசிய அளவில் மதுவிலக்கு  கொண்டு வந்தால், தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்த தயார் என  அமைச்சர் முத்துசாமி கூறியிருப்பது போகாத ஊருக்கு வழி காட்டுவது போல் அமைந்துள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்தார்.
 
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், மதுவிலக்கு பொருத்தமட்டில் மத்திய அரசை  நோக்கி கை காட்டக்கூடாது என்றும் தமிழக அரசு அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
 
தமிழ்நாட்டில் முழு மது விலக்கு என்னும் கொள்கை ஓங்கி ஒலிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மதுவிலக்கு என்பது மாநில பட்டியலில் உள்ளது என குறிப்பிட்ட ராமதாஸ், மதுக்கடைகளை மூடுவதும், திறப்பதும் மாநில அரசையே சாரும் என்று கூறினார். மாறாக மத்திய அரசு மது விளக்கு கொள்கையை அமுல் படுத்த வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.


ALSO READ: சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா.! முன்னாள் அமைச்சர் பங்கேற்பு..!!
 
 
தேசிய அளவில் மதுவிலக்கு  கொண்டு வந்தால்  தமிழ் நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்த தயார் என தமிழக அமைச்சர் முத்துசாமி கூறியிருப்பது போகாத ஊருக்கு வழி காட்டுவது போல் அமைந்துள்ளது என்று ராமதாஸ் காட்டமாக பதில் அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்