பச்சை பாலுக்கான தேவை மக்களிடம் இல்லை: அமைச்சர் மனோ தங்கராஜ்

புதன், 22 நவம்பர் 2023 (11:39 IST)
பச்சை பாலில் கூடுதலாக கொழுப்பு சத்து இருப்பதால் அதன் தேவை மக்களுக்கு இல்லை என்றும் 3.5 சதவீதம் கொழுப்பு உள்ள ஊதா டிலைட் பால் மக்களுக்கு போதும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

தற்கால சூழலுக்கு ஆவின் ஊதா டிலைட் பால் மக்களுக்கு சரியானது என்றும் சரியான விலையை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் பசும்பால் கொடுத்தாலும் தவறு  கொடுக்கவில்லை என்றாலும் விமர்சனம் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் பால் உற்பத்தி குறைந்து வருகிறது என்றும் மேய்ச்சல் நிலங்களின் அளவு குறைந்துள்ளது என்றும் கால்நடைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆவின் மற்றும் தனியார் பால்களுக்கான விலை வித்தியாசம் லிட்டருக்கு 16 ரூபாய் இருக்கிறது என்று  ஆவின் துணைப் பொருட்கள் விற்பனையில் கவனம் செலுத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

விரைவில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு ஆவின் நிறுவனம் கடன் வழங்க உள்ளது என்றும் ஆவின் நிறுவனம் நஷ்டக் கணக்கு காண்பிக்காது என்றும் இது என்னுடைய சவால் என்றும் தெரிவித்தார்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்