தமிழ்நாடு குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். மிகவும் ஜாலி பேர்வழியான ஜெயக்குமார் கையில் பாக்ஸிங் க்ளவுஸ்களை கட்டிக்கொண்டு அங்கு இருந்த் பாக்ஸிங் மாஸ்டருடன் குத்துச்சண்டை போட்டுள்ளார்.
அமைச்சரை தாக்க கூடாது என பாக்ஸர் தடுக்க மட்டும் முயற்சி செய்ய, இதுதான் சான்ஸ் என்று குமுறி விளையாடியிருக்கிறார் அமைச்சர். இயல்பாகவே மிகவும் ஜாலியாக பேசக்கூடியவரான அமைச்சர் ஜெயக்குமார் இதற்கு முன்னர் ஒரு விழா மேடையில் எம்ஜிஆர் பாடல் பாடியது வைரலானது. ஒரு மேடை பேச்சின் போது ‘எனக்கு பாக்ஸிங் தெரியும்’ என ஜெயக்குமாரே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.