கடந்த சில தினங்களாக நடிகர் கமலுக்கும், தமிழக அமைச்சர்களுக்குமான மோதல் நடந்து வருகிறது. கமலின் கருத்துக்கு அமைச்சர்களின் விமர்சனமும் அதற்கு கமலின் பதிலடியுமாக அரசியல் களம் விருவிருப்பாக சென்று கொண்டிருக்கிறது.
ஆனால் இதனை அமைச்சர் ஜெயக்குமார் கேட்கவில்லை என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில், டெங்கு காய்ச்சல் தொடர்பாக பதிவிட்டிருந்தார். இதனையடுத்து ஊடகங்கள் இது தொடர்பாக அமைச்சர்களிடம் கருத்துக்களை கேட்க முயன்றன.
ஆனால் அமைச்சர் ஜெயகுமார் முதல்வர் எடப்பாடியின் அறிவுறுத்தலையும் மீறி கமலுக்கு பதில் சொல்வதில் முதல் நபராக இருக்கிறார். டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு எடுத்த விளம்பர படத்தில் கமல்ஹாசனின் மகளை தான் நடிக்க வெச்சிருக்கோம். அதெல்லாம் அவருக்கு தெரியாதா? அவருக்கு பதில் சொல்றது நம்ம வேலை இல்லை. அதுக்காக அவரு பேசுறதை எல்லாம் கேட்டுட்டு அமைதியாகவே போய்ட முடியுமா என ஜெயக்குமார் பேசினார்.