தினமும் அரை லிட்டர் பால் கறக்கும் கன்றுக்குட்டி

வெள்ளி, 24 ஜூன் 2016 (18:25 IST)
சேலம் அருகே ஒரு கன்றுக்குட்டி தினமும் அரை லிட்டர் பால் கறக்கும் அதிசயம் நடைபெற்று வருகிறது.
 

 
சேலம், ஓமலூரை அடுத்த காடையாம்பட்டியை அடுத்த கே .மோரூர் பகுதியை சேர்ந்த விவசாயி வேலு (39) என்பவர், தனது தோட்டத்தில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கன்று ஈன்றது. அது, பால் கரக்கும் வகையில் இருந்தது.
 
அப்போது, கன்று குட்டியின் மடியிலும் பால் சுரந்து   கொட்டியது. இதை பார்த்து பசுவின் உரிமையாளர் மகிழ்ச்சி அடைந்து, கன்று குட்டியின் மடியில் பாலை கறந்து பார்க்க முயன்றார். அப்போது அந்த கன்றுக்குட்டி அரை லிட்டர் பால் கறந்துள்ள அதிசயம் நடைபெற்றுள்ளது.
 
இந்த தகவல் அறிந்த அக்கம் பக்கத்து கிராம மக்கள் அந்த கன்றுக்குட்டியை பார்த்த வண்ணம் உள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்