பால் டப்பாவில் தங்கத்தை மறைத்துவைத்து துபாயில் இருந்து கடத்திவந்த வாலிபர்

சனி, 30 ஜனவரி 2016 (14:25 IST)
சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்து வந்தனர்.


 

 
அப்போது, துபாயில் இருந்து சென்னைக்கு ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் இருந்து இறங்கிய ஒரு வாலிபரின் நடவடிக்கை வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
 
இதைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ரீசாத் என்பது தெரியவந்தது.
 
இந்நிலையில், அவர் கொண்டு வந்த சூட்கேசை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 5 பால் டப்பாக்கள் இருந்தன. 
 
இதைப் பார்த்து சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த பால் டப்பாவை உடைத்து சோதனை நடத்தினர்.
 
அப்போது, ஒவ்வொரு டப்பாவிலும் 100 கிராம் எடை கொண்ட 2 தங்க கட்டிகள் இருந்தன. அதன்படி மொத்தம் 5 டப்பாக்களில் 1 கிலோ தங்க கட்டிகள் இருந்தன.
 
இதன் மதிப்பு சுமார் ரூ. 30 லட்சம் இருக்கும். அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அப்துல் ரீசாத் துபாயில் இருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது.
 
இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்