பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2015 (17:08 IST)
டெல்டா விவசாயிகளின் சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
 
இன்று மாலை 3.30 மணியளவில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீரை சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் திறந்துவிட்டார்.
 
ஏற்கெனவே 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்த நிலையில், தற்போது 3000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுள்ளது.
 
இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்குமேல் 9 ஆயிரம் கன அடியாகவும் நாளை காலை 6 மணி முதல் 13 ஆயிரம் கன அடியாகவும்  படிபப்டியாக தணணீரின் அளவை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
 
 ஜனவரி 28 ஆம் தேதிவரை தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்றும் இதனால் சம்பா, தாளடிப் பயிர்கள் பயன்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்