திருவள்ளுர் மாவட்ட மதிமுக செயல் வீரர்கள் கூட்டம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில், 500 டாஸ்மாக் கடைகளை மூடியது சாதனை அல்ல. எல்லா கடைகளையும் மூட வேண்டும். அதுதான் சாதனை, அப்போது தான் பூரண மதுவிலக்கு அமையும்.
மக்கள் நலக்கூட்டணியில் இருந்து தேமுதிக, தமாகா வெளியேறினாலும் கூட எங்களுக்கு கவலையில்லை. எங்கள் கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளனர். இவர்களோடு இணைந்து மதிமுக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கும் என்றார்.