முடிவுக்கு வந்த வைகோ சபதம்

கே.என்.வடிவேல்

வெள்ளி, 27 மே 2016 (08:48 IST)
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சபதம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே அவரை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
 

 
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி, சங்கரன்கோவிலில் பேசும்போது, நொறுக்கிப்போன விவசாயிகளுக்காக இந்த பச்சைத்துண்டை எனது தலையில் கட்டுகிறேன். இனிமேல் இந்த துண்டை எடுக்கவே மாட்டேன் என சபதம் செய்து, சட்டமன்றத்  தேர்தல் முழுக்க பச்சைத்துண்டுடன் சென்றே பிரசாரம் செய்தார்.
 
இந்த நிலையில், கடந்த மே 21 ஆம் தேதி மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட வைகோ தனது பச்சைத்துண்டை தூக்கிஎறிந்தார்.
 
இது குறித்து அக்கட்சியின் முன்னணி தலைவர்களிடம் கேட்டபோது, அதிமுக வெற்றிக்கு வைகோ தான் காரணம் என சமூகதளங்களில் ஏற்கனவே, கடும் விமர்ச்சனம் செய்கின்றனர். மேலும், பச்சை கலர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் ராசியான கலர். அதனால்தான், வைகோ பச்சைத்துண்டோடு செல்கிறார் என்று கூறுவார்கள்.
 
தயவுசெய்து எங்களுக்காக இந்த ஒரு விஷயத்தில் அனுசரித்துச் செல்லுங்கள் என கெஞ்சிக் கூத்தாடி சம்மதிக்கவைத்தோம். இதனை ஏற்றுக் கொண்டு பச்சைத்துண்டுக்கு டாட்டா காட்டிவிட்டார் வைகோ என்று முடித்தனர். ஆக, வைகோவின் சபதம் முடிவுக்கு வந்துவிட்டது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

வெப்துனியாவைப் படிக்கவும்