மதுராந்தகம் ஏரி உடைந்ததாக சொல்லப்படும் வதந்தியை நம்ப வேண்டாம்: பொதுப்பணித்துறை தகவல்

செவ்வாய், 24 நவம்பர் 2015 (08:44 IST)
மதுராந்தகம் ஏரி உடைந்து விட்டதாக பரவிய தவறான தகவலை யாரும் நம்பவேண்டாம் என்று பொதுப்பணித் துறை தெரிவித்தது.


 

 
தொடர்மழை காரணமாக மதுராந்தகம் ஏரி தனது முழுக் கொள்ளவை எட்டியுள்ளது. இதனால், உபரி நீர் வெளியேறி வருகிறது.
 
மீண்டும் கன மழை பெய்ததால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரிக்கு சுமார் 18 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 
 
இந்நிலையில், மதுராந்தகம் ஏரி உடைந்து விட்டதாகவும், இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் தகவல்களைப் பரப்பினர்.
 
இதனால் அப்பகுதி மக்கள் கடுமையான அச்சத்திற்கு உள்ளாயினர். இத்தகவலை அறிந்த மதுராந்தகம் பொதுப்பணித் துறை அதிகாரிகள், இது தவறான தகவல் என்றும் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினர்.
 
மேலும், உபரி நீர் வெளியேற்றப்படுவதன் மூலம் 12 கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது என்றும் அப்பகுதி பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனறும் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்