நல்ல காதல் கள்ளக்காதல் ஆனது ; டிரைவருடன் ஓடிய பெண்

புதன், 31 ஆகஸ்ட் 2016 (13:03 IST)
கோவில்பட்டி அருகே உள்ள வீரவாஞ்சி நகரில் வசிப்பவர் மகாராஜா. அவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். 


 

 
இவருக்கும் மேல இலந்தை குளத்தை சேர்ந்த சண்முகசுந்தரி என்பவருக்கும் மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், இரு குடும்பத்தினரிடம் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக அந்த திருமணம் நடைபெறவில்லை. அதன்பின் மகாராஜா மாரிலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
 
அதேபோல், சண்முகசுந்தரியும்  மாரிசெல்வம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கும் இரு குழந்தைகள் உள்ளனர்.
 
இந்நிலையில், மகாராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரின் மனைவி மாரிலட்சுமி அவரின் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். 
 
இதனால் விரக்தியில் இருந்த மகாராஜா, தனக்கு நிச்சயிக்கப்பட்டு, வேறு ஒருவருக்கு மனைவி ஆன சண்முகசுந்தரியுடன் பேச தொடங்கியுள்ளார்.  நாளைடைவில் இருவரும் ஒன்றாக வாழ முடிவெடுத்தனர். 
 
இதனால், அவர்கள் இருவரும் நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேறினர். இதனால் சண்முக சுந்தரியின் கணவர் மற்றும் உறவினர்கள் கோபம் அடைந்தனர்.
 
அவர்கள் நேராக மகாராஜாவின் விட்டிற்கு சென்று, கதவை அடித்து உடைத்தனர். மேலும், வீட்டின் முன்பு இருந்த மோட்டாச் சைக்கிளுக்கும் தீ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 
தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் சம்பந்தப்பட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்