கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் வசித்து வருபவர் நேத்ராவதி. இவர் நர்ஸிங் டிப்ளமோ படித்து வந்தார். மேலும், குருசாமி என்ற இளைஞர் மீது காதல் கொண்டு அவரை காதலித்து வந்தார்.
இந்நிலையில், சித்ரதுர்கா கோட்டையை சுற்றிப் பார்க்கச் சென்ற நேத்ராவதி, கால்தவறி கீழே விழுந்தார். இதனால், அவரது முதுகெலும்பில் காயம் ஏற்பட்டது. உடனே அவருக்கு பெங்களூரூ நிம்ஹான்ஸ் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சித்ரதுர்காவில், முருகராஜேந்திர ப்ரிஹான் மடத்தில் ஒரே நேரத்தில் பல்வேறு ஜோடிகளுக்கு திருமணம் செய்யப்பட்ட போது, நேத்ராவதிக்கும் - குருசாமிக்கும் திருமணம் செய்து கொண்டனர்.