மெரினா கடற்கரையில் நகை, செல்போன்களை பறித்த கும்பல்

திங்கள், 18 ஜனவரி 2016 (11:28 IST)
காணும் பொங்கல் கொண்டாட சென்னை மெரினா கடற்கரைக்கு வந்த வாலிபர்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி செல்போன்கள் மற்றும் தங்கச் சங்கிலி ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளது.


 

 
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் குழந்தைகள் பெண்களி உள்ளிட்டவர்கள் நேற்று கூட்டம் கூட்டமாக வந்திருந்தனர்.
 
அதன்படி, வேளச்சேரியை சேர்ந்த பிரதாப் என்ற 18 வயது இளைஞர் தனது நண்பர்கள் 5 பேருடன் மெரினா கடற்கரைக்கு வந்திருந்தார்.
 
அவர்கள், எம்ஜிஆர் நினைவிடத்திற்கு பின்புறம் ஒன்றாக அமர்ந்தபடி, விளையாடிக் கொண்டிருந்தனர். 
 
அப்போது, வியாசர்பாடியைச் சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அவர்கள், பிரதாப் உள்பட 5 பேர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
 
பின்னர் அவர்களை, கத்தி முனையில் மிரட்டி அவர்கள் வைத்திருந்த 5 செல்போன், ஒன்றரை சவரன் செயின் ஆகியவற்றை பறித்துக்ண்டு அங்கருந்து தப்பி ஓடினர்.
 
இதைத் தொடர்ந்து பிரதாப்  கூச்சலிட்டார். இதைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு, தப்பி ஓடிய வாலிபர்களை பிடிக்க விரட்டினர்.
 
அப்போது, 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் மட்டும் சிக்கினான். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட சிறுவனை பொது மக்கள் சரமாரியாக தாக்கினர்.
 
பின்னர், அந்த சிறுவனை அண்ணா சதுக்கம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற 9 பேரை கைது செய்ய காவல்துறையினர் விரித்து வருகின்றனர் என்பது குறிப்பிபடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்