மண்டல் கமிஷன் பரிந்துரை: மத்திய அரசு மீது கருணாநிதி குற்றச்சாட்டு

வெள்ளி, 8 ஜனவரி 2016 (23:09 IST)
மண்டல் கமிஷன் பரிந்துரைகள்படி, மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடுகள் செய்யப்படுவதில்லை என திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.


 

இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி கேள்வி பதில் வடிவிலான வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
மத்திய அரசுத் துறைகளில், முன்னேறிய சமுதாயத்தினர் மேலும் முன்னேறுவதற்கும், பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் மேலும் பின்னடைவைச் சந்திப்பதற்கும், ஜனநாயகத்தில் ஆதிக்கபுரியினர் எப்படியெல்லாம் வஞ்சக வலை விரித்து, பலர் தாழவும் - சிலர் வாழவும் வழி வகுத்து வருகிறார்கள் என்பதையே இந்தத் தரவுகள் நமக்கு உணர்த்துகின்றன.
 
கேள்வி :- அரும்பாடுபட்டு கிடைக்கப் பெற்ற மண்டல் கமிஷன் பரிந்துரைகள்படி, மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடுகள் செய்யப்படுவதில்லை என்று அண்மையில் தாங்கள் தெரிவித்ததை உறுதி செய்யும் வண்ணம், மேற்கொண்டும் செய்தி வந்திருக்கிறதே?
 
பதில் :- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெற்ற விவரங்களைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன். மத்திய அரசின் 9 அமைச்ச கங்கள் மற்றும் 9 துறைகளில் பணியாற்றுவோரைப் பொறுத்து, அந்த விவரங்கள்படி, ஓ.பி.சி. வகுப்பின ருக்கு, குரூப் - ஏ பணிகளில் 12 சதவிகித அளவுக்கும், குரூப்-பி பணிகளில் 7 சதவிகித அளவுக்கும், குரூப்-சி பணிகளில் 17 சதவிகித அளவுக்கும், குரூப்-டி பணிகளில் 16 சதவிகித அளவுக்கும் என ஒட்டுமொத்தமாக 11 சதவிகிதம் பேர்தான் பணியாற்றுகிறார்கள்.
 
தாழ்த்தப்பட்ட வகுப்பினரைப் பொறுத்தவரை யில் குரூப்-ஏ பணிகளில் 13 சதவிகித அளவுக்கும், குரூப்-பி பணிகளில் 15 சதவிகித அளவுக்கும், குரூப்-சி பணிகளில் 20 சதவிகித அளவுக்கும், குரூப்-டி பணிகளில் 29 சதவிகித அளவுக்கும் என ஒட்டுமொத்தமாக 17 சதவிகிதம் பேர் பணியாற்று கிறார்கள்.
 
பொதுப்பிரிவினரைப் பொறுத்தவரையில், குரூப்-ஏ பணிகளில் 69 சதவிகித அளவுக்கும், குரூப்-பி பணிகளில் 71 சதவிகிதம் அளவுக்கும், குரூப்-சி பணிகளில் 57 சதவிகித அளவுக்கும், குரூப்-டி பணிகளில் 44 சதவிகித அளவுக்கும் என ஒட்டு மொத்தமாக 65 சதவிகிதம் பேர் பணியாற்று கிறார்கள்.
 
மத்திய அரசுத் துறைகளில், முன்னேறிய சமுதாயத்தினர் மேலும் முன்னேறுவதற்கும், பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் மேலும் பின்னடைவைச் சந்திப்பதற்கும், ஜனநாயகத்தில் ஆதிக்கபுரியினர் எப்படியெல்லாம் வஞ்சக வலை விரித்து, பலர் தாழவும் - சிலர் வாழவும் வழி வகுத்து வருகிறார்கள் என்பதையே இந்தத் தரவுகள் நமக்கு உணர்த்துகின்றன என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்