இறந்து பிறந்த குழந்தையை கூவம் ஆற்றில் வீசிய தந்தை..போலீசார் விசாரணை..!
வியாழன், 12 அக்டோபர் 2023 (17:10 IST)
சென்னையில் இறந்த பிறந்த குழந்தையை அந்த குழந்தையின் தந்தை கூவம் ஆற்றில் வீசியதை அடுத்து அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
சென்னையை சேர்ந்த ஒருவர் திடீரென கூவம் ஆற்றில் பச்சிளம் குழந்தையின் பிணத்தை வீசியதால் பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் காவல்துறை, தீயணைப்பு படை வீரர்களுடன் இணைந்து குழந்தையின் சடலத்தை தேடி எடுத்தனர். இதனை அடுத்து குழந்தையின் சடலத்தை கூவம் ஆற்றில் வீசிய தந்தையிடம் எழும்பூர் போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
இறந்து பிறந்த குழந்தையை முறைப்படி அடக்கம் செய்யாமல் கூவம் ஆற்றில் வீசிய தந்தையால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.