கோவை மதுக்கரை அருகே பிடிபட்ட ஒற்றை யானை சில ஆண் யானைகளுடன் சேர்ந்து மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனையடுத்து கடந்த 19ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு 18 வயதான ஆண் காட்டு யானையை, வனத்துறையினர் கும்கி யானைகள் மற்றும் மருத்துவர்களின உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
மீண்டும் மீண்டும் அதிகளவு மயக்க ஊசி செலுத்தியதால், உணவு இல்லாமல், மயக்க மருத்தின் சக்தியை தாங்க முடியாமல், கூண்டுக்குள் அடைபட்ட சித்திரவதையை தாங்கமுடியாமலும் மகராஜ் இறந்ததால், இந்த மரணம் வனத்துறையின் திட்டமிட்ட கொலை என்றே கூறப்படுகிறது.
இதுகுறித்து யானைகள் ஆர்வலர் வினோத்குமார் கூறுகையில், ”உரிய விசாரணை நடத்தவும், வழித்தடங்களை ஆக்கிரமித்திருப்பவர்களின் பட்டியலைத் தயாரித்து நடவடிக்கை எடுப்பதும் உடனடித் தேவை” என்று கூறியுள்ளார்.