ஆன்லைன் சூதாட்டத்தை தடை பண்ண என்ன நடவடிக்கை? – மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் கேள்வி!

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (14:49 IST)
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் அதை தடை செய்வது குறித்து நடவடிக்கை எடுப்பது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பலர் பணத்தை இழப்பதுடன், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. கடந்த 10 நாட்களில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த 3 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை “ஆன்லை ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன?” என்று விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் 10 நாட்களில் விளக்க அறிக்கை அளிப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்