இந்தியா முழுவதும் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுகளில் ஒன்று மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ஜல்லிக்கட்டு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அதிக கட்டுப்பாடுகளோடு 300 வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கே தொடங்கியது.