மதுரை வாசத்தை முடித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

புதன், 2 செப்டம்பர் 2015 (22:45 IST)
சென்னை உயர் நீதி மன்றம், நிபந்தனை ஜாமீனை தளர்த்தியதால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிடித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மதுரை வாசத்தை முடித்து, சென்னை திரும்பினார்.
 

 
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பணியாற்றிய வளர்மதி என்பவர், தன்னை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் நாராயணன் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
அந்தப் புகாரின் பேரில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் நாராயணன் மீது காவல்துறையினர் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். தன்னை காவல்துறை கைது செய்யாமல் இருக்க ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.
   
இந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி மதுரையில் தங்கி, தல்லாகுளம் காவல் நிலையத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தினமும் கையெழுத்திட்டு வந்தார்.
 
இதனையடுத்து, ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையை சென்னை உயர் நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. இதனால் இனி அவர் மதுரை வாசத்தை முடித்து சென்னைக்கு திரும்பினார்.
 
ஆனால், போலீஸ் விசாரணைக்கு அழைக்கும் போது, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்