மதன் இடைத்தரகர்: பச்சமுத்து பரபரப்பு ஒப்புதல் வாக்குமூலம்!

புதன், 31 ஆகஸ்ட் 2016 (12:47 IST)
எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரிக்கு மாயமான மதன் இடைத்தரகராக செயல்பட்டார் என்பதை காவல்துறை விசாரணையில் எஸ்.ஆர்.எம். குழும தலைவர் பச்சமுத்து ஒப்புக்கொண்டுள்ளார்.


 
 
எஸ்ஆர்எம் கல்வி நிறுவனகங்ளின் தலைவர் பச்சமுத்து சில தினங்களுக்கு முன்னர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். மதன் மாயமான வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்களின் தலைவர் பச்சமுத்துவிடம் விசாரணை நடத்தி அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
 
குற்றப்பிரிவு போலீசார் பச்சமுத்துவை கஸ்டடியில் எடுத்து நடத்திய விசாரணையில் 165 கேள்விகளை தயார் செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரிக்கு மதன் இடைத்தரகராக இருந்து செயல்பட்டது உண்மைதான் என்று அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்