10 அமைச்சர்களுடன் ஆளுநரை சந்திக்க செல்லும் சசிகலா

வியாழன், 9 பிப்ரவரி 2017 (15:26 IST)
நேற்று முன்தினம் இரவு, சென்னை கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அங்கு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு எதிராக கொடுத்த பேட்டி, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள மோதல்தான் தற்போது தமிழக அரசியல் சூழ்நிலையை பரபரப்பாக வைத்துள்ளது. அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரின் ஆதரவும் தங்களுக்கு இருப்பதாக சசிகலா தரப்பு கூறி வந்தது. ஆனால், அதிலிருந்து 5 பேர் ஏற்கனவே ஓ.பி.எஸ் பக்கம் வந்துவிட்டனர்.   

சட்டமன்றத்தில் தன்னுடைய பலத்தை நிரூப்பேன் என ஓ.பி.எஸ் கூறியுள்ளார். எனவே, சசிகலா தலைமையில் அதிருப்தியில் உள்ள பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் தன் பக்கம் வருவார்கள் என்பது ஓ.பி.எஸ்-ஸின் நம்பிக்கை. இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இன்று இரவு 7.30 மணியளவில் ஆளுநரை சந்திக்க உள்ளோம் . அப்போது ஆட்சி அமைக்க கோரிக்கை வைக்கப்படும். ஆளுநருடனான சந்திப்பிற்கு சசிகலா மற்றும் அவருட10 அமைச்சர்கள் செல்கிறார்கள் என்றார்.  மேலும் பன்னீர்செல்வத்திற்கு எந்தவித நெருக்கடியும் அளிக்கப்படவில்லை. அவர் சட்டபேரவையில் பெரும்பான்மையை நிருபிக்க முடியாது என்றும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்