திமுக தலைவரானார் ஸ்டாலின் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (10:42 IST)
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

 
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணியளவில் திமுக பொதுக்குழு கூடியது.
 
தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாலர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செயய்வில்லை. 
 
எனவே, பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக ஸ்டாலினும், பொருளாலராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதேபோல், ஸ்டாலின் வகித்து வந்த செயல் தலைவர் பதவியை வேறு யாருக்கும் வழங்கும் திட்டம் இல்லாததால் அந்த பதவி நீக்கப்படுவதாக அன்பழகன் அறிவித்தார்.
 
இதையடுத்து, அறிவாலயத்தில் கூடியுள்ள திமுக நிர்வாகிகளும், வெளியே கூடியிருந்த திமுக தொண்டர்களும் ஆர்ப்பரித்து தங்கள் உற்சாகத்தை தெரிவித்தனர். இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்