ஜனாதிபதியிடம் முறையிட்டுளோம். நல்ல தகவல் கிடைக்கும். ஸ்டாலின் நம்பிக்கை

வியாழன், 23 பிப்ரவரி 2017 (20:41 IST)
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சற்று முன்னர் டெல்லியில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களை சந்தித்து கடந்த சனிக்கிழமை சட்டபேரவையில் நடந்த நிகழ்வுகள் மற்றும் சபாநாயரின் ஒருதலைபட்ச முடிவுகள் ஆகியவை குறித்து முறையிட்டுள்ளார்.




சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளதாகவும், விரைவில் அவரிடம் இருந்து நல்ல தகவல் கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் தான் கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார். ஜனாதிபதி சந்திப்பின்போது மு.க.ஸ்டாலினுடன் துரைமுருகன், திருச்சி சிவா ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிலையில் ஜனாதிபதியின் சந்திப்பு முடிந்த கையோடு அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி அவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்