திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு

புதன், 30 ஜூலை 2014 (17:21 IST)
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது முதல்வர் சார்பில் சென்னை மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் கடந்த 22 ஆம் தேதி சட்டப் பேரவையிலிருந்து வெளியேற்றி சபாநாயகர் உத்தரவிட்டார். வெளியில் திமுக எம்.எல்.ஏ.க்களுடன் வந்த பொருளாளர் ஸ்டாலின் முதல்வருக்கு எதிராக பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
மனுவி விவரம்: 
 
கடந்த 22 ஆம் தேதி முதல்வர் சட்டப் பேரவைக்கு வராத நிலையில், முதல்வரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் பேசினார். எனவே, ஸ்டாலின் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் ஜெகன் தாக்கல் செய்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
 
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்