தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும் - வானிலை மையம் எச்சரிக்கை

திங்கள், 3 நவம்பர் 2014 (15:47 IST)
தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து தீவிர காற்றழுத்த மண்டலமாக (புயலாக) மாறும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. வங்கக்கடலில் அடுத்தடுத்து, குறைந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள் ஆகியவற்றில் சராசரி மழை அளவை விட அதிகமாக பெய்துள்ளது.
 
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருவதால் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழையும் என்றும், ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
மேலும், அந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து தீவிர காற்றழுத்த மண்டலமாக (புயலாக) 6 அல்லது 7ஆம் தேதி மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்