ஓட்டலில் உட்கார்ந்து சாப்பிடலாம், டீ கடைகளைத் திறக்கலாம், சமூக இடைவெளி விட்டு கடைகள் அனைத்தும் திறக்கலாம், சலூன் கடைகள் திறக்கலாம் என்பது போன்ற பல தளர்வுகளை அறிவித்தது இந்த நிலையில் இன்று மாலை திடீரென சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு என மீண்டும் அறிவித்துள்ளது இதனால் 4 மாவட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
ஜூன் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு என்பதால் 10 நாட்களுக்கு தேவையான மளிகை மற்றும் காய்கறிகளை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளில் குவிந்துள்ளதால் தனிமனித இடைவெளி என்பது காற்றில் பறக்க விடப்படுகிறது. இவ்வளவிற்கும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை கடைகள் உண்டு என அறிவிக்கப்பட்ட போதிலும் பொருட்களை வாங்கி குவிக்க மக்கள் முண்டியடித்து வருவது பெரும் அதிர்ச்சியாக உள்ளது