சென்னை, எம்எம்டிஏ பகுதியில் வாக்காளர்களுக்கு பாமக சார்பில் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், இளைஞரணித் தலைவர் அன்புமணி பேசுகையில், சட்டசபைத் தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை. தேர்தல் ஆணையம் முறையாக செயல்படவில்லை. வரும் தேர்தலிலும் அதிமுக, திமுகவுடன் பாமக கூட்டணி வைக்காது. உள்ளாட்சித் தேர்தலிலும் பாமக தனித்துப் போட்டியிடும் என்றார்.